நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எஸ் பி பி பெயர் சூட்டியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா 

சென்னை:

காம்தார் நகர் முதல் தெருவுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். 

இளையராஜா, தனது எக்ஸ் பக்கத்தில் ``என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். 

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் நினைவைப் போற்றும் வகையில், சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள காம்தார் நகர் முதல் தெருவுக்கு, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயர் சூட்ட வேண்டுமாறு, அவரது மகன் சரண் முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனையடுத்து, காம்தார் நகரின் முதல் தெருவை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை எனப் பெயர் சூட்டப்படும் என முதல்வர் புதன்கிழமையில் அறிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset