செய்திகள் கலைகள்
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம்: அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம்
சென்னை:
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஃப்லிம் சிட்டியில் யூஸ்ட்ரீம்: அதிநவீன வசதிகளை கொண்ட மெய்நிகர் தயாரிப்புக் கூடம் தொடக்கம் கண்டது. இந்த தொடக்க நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட சர்வதேச புகழ்ப் பெற்ற திரைப் பிரபலங்கள் பங்கேற்றனர்.
முழுமையான தொழில்நுட்பப் பணிகளை வழங்கும் uStream, ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் A.R. ரஹ்மான் மற்றும் தொழில்துறை முன்னோடி ஸ்ரீதர் சந்தானம் கூட்டணியில் உருவாகியுள்ளது.
தொடக்க விழாவில் தொழில்துறை தலைவர்களின் கருத்தாழம் மிக்க உரைகள் இடம்பெற்றன. சிஜி ப்ரோவைச் சேர்ந்த எட்வர்ட் டாசன் டெய்லர், மெய்நிகர் தயாரிப்பில் தனது நிபுணத்துவத்தையும், எதிர்காலத் திரைப்படத் தயாரிப்பை மாற்றி அமைக்கும் தொழில்நுட்ப திறனையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக, பிரபல இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டு, UStream-ன் புதுமையான திறன்கள் மீதான தனது ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தினார்.
UStream மூலம் இந்தியக் கதைசொல்லலை உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு செல்ல முடியும். தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தொழில்நுட்பத்தை மட்டுமில்லாமல், புதிய வாய்ப்புகளையும் அளிப்பதும் இதன் நோக்கம் ஆகும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.
வியப்பூட்டும் LED திரை அமைப்புகள் கொண்ட இந்த ஸ்டூடியோவில், கலைஞர்கள் கணினி காட்சியமைப்புகளுடன் கற்பனை செய்ததை, நேரடியாக அந்தக்கணத்திலேயே கண் முன் காட்சிப்படுத்த முடியும்.
இந்த நவீன டிஜிட்டல் நுட்பத்தைக் உலகப்பதிவுகள், அக்கணத்தின் கற்பனைக்காட்சிப்படுத்துதல், செயல்திறன் பதிவு, பல மெய்நிகர் காட்சிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் simulcam நுட்பம், கேமராவினுள்ளேயே செயல்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் (ICVFX) கொண்டு உலகின் மெய்நிகர் தயாரிப்புத்துறையில் முன்னணியில் இருக்கிறது uStream.
uStream, படைப்பாற்றல் பணிகளை முழுமையாகச் செயல்படுத்தும் மெய்நிகர் தயாரிப்பு ஸ்டூடியோ (Virtual Production Studio). திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தீவிரப்படுத்தப்பட்ட XR தீர்வுகளை அளிக்கிறது. ஸ்டூடியோ பல்வேறு திரைச்செயல்பாடுகளை வழங்குகிறது.
Al மூலம் மேம்படுத்தப்பட்ட Previz, கலை மற்றும் வடிவமைப்புச் செயல்பாடுகள், மெய்நிகர் உடைமை மேம்பாடு, VFX, DI (டிஜிட்டல் இடைநிலை) ஆகியவை உள்ளடங்கும். uStream Labs மூலமாக, புதிய தலைமுறை மெய்நிகர் தயாரிப்புத்திறமைகளை (Virtual Production Talent) வளர்ப்பதற்கான பயிற்சித் திட்டங்களையும் வழங்குகிறது.
-தமிழன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2024, 1:33 pm
பாலியல் புகார் காரணமாக நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கான தேசிய விருது நிறுத்தி வைப்பு
October 4, 2024, 6:52 pm
கட்சி பூஜையில் பங்கேற்காமல் கடைசி பட பூஜையில் பங்கேற்ற விஜய்: ஏமாற்றத்தில் தொண்டர்கள்
October 4, 2024, 10:23 am
உடல்நலனில் முன்னேற்றம்: வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
October 1, 2024, 8:29 am
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
September 29, 2024, 12:50 pm
பினாங்கு மாநிலத்தில் நடைபெற்ற இந்தியர் நடனத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது
September 28, 2024, 11:14 am
Harry Potter புகழ் நடிகை மேகி ஸ்மித் காலமானார்
September 27, 2024, 10:04 am
எஸ் பி பி பெயர் சூட்டியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இளையராஜா
September 26, 2024, 1:45 pm