நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த ரோட்ரி ஓராண்டுவரை எந்தவோர் ஆட்டத்திலும் களமிறங்க மாட்டார்

லண்டன்:

அர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்த ரோட்ரி ஓராண்டுவரை எந்த ஆட்டத்திலும் களமிறங்க மாட்டார்.

இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.

இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது.

இவ்வாட்டத்தின் போது மென்செஸ்டர் சிட்டி ஆட்டக்காரர் ரோட்ரி கடுமையான காயங்களுக்கு இலக்கானர்.

முழங்கால் காயத்தை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இக் காயத்தால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு அவரால் கால்பந்து விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மென்செஸ்டர் சிட்டியுடன் இந்த பருவத்தில் அவர் விளையாட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset