நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இயற்கைக்கு நன்றி சொல்லும் நேரம்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்

சிங்கப்பூர்:

பிரதமர் லாரன்ஸ் வோங் அறுவடைத் திருநாளைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகத்துக்குப் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

"இயற்கைக்கு நன்றி சொல்லும் நேரம் இது. குடும்பங்கள், சமூகங்கள் ஆகியவற்றின் பிணைப்பைப் போற்றும் தருணம் இது. புதுமையையும் செழிப்பையும் அரவணைக்கும் அதேநேரத்தில் நாம் நமது வேர்களையும் கொண்டாடவேண்டும் என்பதை இந்தப் பண்டிகை நினைவூட்டுகிறது. அனைவருக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள். இந்தப் பண்டிகை உங்கள் வாழ்வில் அன்பையும் மகிழ்ச்சியையும் புது வாய்ப்புகளையும் கொண்டுவரட்டும்" என்று சிங்கப்பூர் பிரதமர்  வோங் குறிப்பிட்டார்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

+ - reset