செய்திகள் உலகம்
ஹஜ் யாத்திரை -2025: இலங்கை, சவூதி நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையொப்பமானது
கொழும்பு:
சவுதி அரேபியாவின் ஜித்தாவில் 2025 ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.
புத்தசாசன, மத, கலாச்சார விவகார அமைச்சர் கலாநிதி சுனில் செனவியும் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் கலாநிதி அப்துல் ஃபத்தா பின் சுலைமான் மஷாத் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் இலங்கை முஸ்லிம்களுக்கான புனித யாத்திரை அனுபவத்தை மேம்படுத்துவதற்கான இரு அரசாங்கங்களின் உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.
சவூதி ஹஜ், உம்ரா அமைச்சரின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவிற்கு சென்ற அமைச்சர் செனவி, கையொப்பமிடுவதற்கு முன்னர் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கை குடிமக்களுக்கான ஹஜ் அனுபவத்தை மேம்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்துவதை வலியுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் ஹஜ் நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்களையும், மென்மையான மற்றும் திறமையான புனித யாத்திரை செயல்முறையை நோக்கமாகக் கொண்ட திட்டங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சவூதிக்கான ஹஜ், உம்ரா அமைச்சர் கலாநிதி தவ்ஃபிக் ஃபவ்ஸான் அல்ராபியாவையும் அமைச்சர் செனவி சந்தித்துள்ளார்.
மேலும் ஹஜ் சேவை வழங்குநர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட உள்ளார். இந்தக் குழு, புனித நபிகள் நாயகத்தின் நகரமான மதீனாவையும், ஜித்தா, மதீனாவில் உள்ள முக்கியமான கலாச்சார தலங்களையும் பார்வையிட்டது. அமைச்சர் ஜித்தாவில் உள்ள இலங்கை சமூகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக் குழுவில் தேசிய ஒருங்கிணைப்புத் துணை அமைச்சர் முனீர் முளப்பர், சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத், முஸ்லிம் மத, கலாச்சார விவகாரத் துறையின் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.நவாஸ், ஜித்தாவில் உள்ள செயல் தூதர் மஃபூசா லாபீர், ஹஜ் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எம்.என்.எம். அஷ்ரப் ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
January 14, 2025, 2:19 pm
இயற்கைக்கு நன்றி சொல்லும் நேரம்: சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்
January 13, 2025, 11:21 am
முதல் விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் New Glenn உந்துகணை
January 13, 2025, 10:58 am
எங்கு பார்த்தாலும் சாம்பல்: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் 16 பேர் மரணம்
January 13, 2025, 10:18 am
கனடா பிரதமர் போட்டியிலிருந்து அனிதா ஆனந்த் விலகல்
January 12, 2025, 8:28 pm
இலங்கையில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு
January 12, 2025, 12:33 pm
விபத்துக்குள்ளான தென் கொரிய விமானத்தின் கருப்பு பெட்டி கடைசி நான்கு நிமிடங்கள் செயல்படவில்லை
January 12, 2025, 11:04 am
29 ரஷ்ய நிறுவனங்கள் மீது ஜப்பான் பொருளாதாரத் தடை விதித்துள்ளது
January 12, 2025, 11:02 am