நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எங்கு பார்த்தாலும் சாம்பல்: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீயில் 16 பேர் மரணம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸில் பரவும் காட்டுத் தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 

ஈட்டன் பகுதியில் 11 பேரும், பாலிசேட்ஸ் பகுதியில் 5 பேரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பலத்த காற்று காரணமாக தீயை அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

காற்றின் வேகம் அதிகமானதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். 

பள்ளத்தாக்கில் வீரர்கள் தீயை அணைக்கப் போராடிக் கொண்டிருந்தபோது விமானம் மூலம் வானில் இருந்து இளஞ்சிவப்பு தீ தடுப்பு மருந்து வீசிப்பட்டது. 

இதனிடையே, லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் உள்ள தீயணைப்பு குழுவினர், அல்டடேனா, பசடேனா அருகே 22,660 ஏக்கர் பாலிசேட்ஸ் பகுதி தீயில் 11 சதவீதத்தையும், 14,000 ஏக்கர் ஈட்டன் பகுதி தீயில் 15 சதவீதத்தையும் கட்டுப் படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் மேலும் இரண்டு பகுதிகளில் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டு வருவதில் தீயணைப்பு வீரர்கள் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்துள்ளனர். 

காலபாசாஸுக்கு அருகே கென்னத் பகுதி காட்டுத் தீயின் 80 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் 1,000 ஏக்கர்களுக்கும் அதிகமாக பகுதிகள் தீயில் கருகியுள்ளன. 

சான் ஃபெர்னான்டோ பள்ளத்தாக்கில் ஹுர்ஸ்ட் பகுதி தீயில் 76 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 800 ஏக்கர்கள் தீயில் ஏரிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset