நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிகரம் தொடு

By
|
பகிர்

இரு விஷயங்கள் கைவரப்பெற்றால் நீங்கள் வெற்றியாளர்தான்

இரு விஷயங்கள் கைவரப்பெற்றால் நீங்கள் வெற்றியாளர் தான்

வாழ்வில் நாம் எங்கு வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் வாழ நேரலாம். 

அதன் ஓர் உதாரணம், கோவிட், அல்லது போர் (war) போன்ற திடீர் சூழலில் எங்கெங்காவது மாட்டிக் கொண்டு, முன்பின் தெரியாத யாருடனும் நாம் தங்க நேர்வது, அல்லது உடன் வசிக்க நேர்வது போன்றவை...

இனி எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல்கள் இன்னும்கூட அதிகமாகலாம்.

நான் சொல்ல வந்த விஷயம் அதுவல்ல.. 

எங்கு, யாருடன் நாம் வசிக்க நேர்ந்தாலும், அந்த சூழலை  டென்ஷன் இன்றி, பதற்றம் இன்றி, பிரச்சனைகள் எதுவுமின்றி கொண்டு செல்ல... இரண்டே இரண்டு விஷயங்கள் நம்மிடம் இருந்தால் போதுமானது. 

முதலாவது "புன்னகை".  பிரச்சனைக்குரிய இடங்களில், புன்னகை  என்பது ஒரு மாயாஜாலம் போல் அந்தப் பிரச்னையே இல்லாமல் பண்ணிவிடக் கூடிய பவர்- ஆற்றல் கொண்டது. எந்த உறவுகளையும் இலகுவாக்கக் கூடியது...

இரண்டாவது, "அமைதியாக இருப்பது", அதிலும் குறிப்பாக, பிரச்னைக்குரிய இடங்களில் அமைதியாக இருப்பது என்பது,  அப்படியொரு பிரச்னையே மேலெழும்பாமல் முற்றிலும் தவிர்த்து விடக்கூடிய பவர்-ஆற்றல் கொண்டது. 

இந்த இரு விஷயங்களையும் கைவசம் வைத்திருங்கள்.. உங்கள் குடும்பத்தில் மட்டுமல்ல, நீங்கள் எங்கே இருந்தாலும் அனைவரும் விரும்புபவராக இருப்பீர்கள்..

-லோகநாயகி இராமச்சந்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset