நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய்யின் GOAT திரைப்படம்: வெங்கட் பிரபுவின் வெறித்தனமான சம்பவம் 

சென்னை: 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள GOAT திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. 

3 மணிநேரம் 3 நிமிடங்கள் என படத்தின் நீளம் ரசிகர்களை எந்த இடத்திலும் தொய்வடைய செய்யவில்லை என்றே சொல்லலாம். நடிகர் விஜய் தனது அழகான, உணர்ச்சிமிகுந்த, அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யாருமே யூகிக்க முடியாத நிலையில் திரைக்கதை நகர்கிறது. திரைக்கதையை அழகாக இயக்குநர் வெங்கட் பிரபு செதுக்கியிருக்கிறார். 

யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் படம் வெளியாகும் முன்பு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இப்போது இந்த பாடல்களின் மீது மக்கள் அதிகம் நாட்டம் கொள்வார்கள் என்று தெரிகிறது. 

படத்தின் இரண்டாம் பாதி நம்மை கிரங்கடிக்க வைக்கிறது. அதுவும் கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களின் ஆராவாரத்திற்குக் கொண்டு செல்கிறது. 

மொத்தத்தில் THE GREATEST OF ALL TIME திரைப்படம் ஒரு பக்கா கமர்ஷியல் என்டர்டைன்மென்ட் திரைப்படமாக அமைந்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset