நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம்: டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா @DSG தலைமையில் முதல் நாள் முதல் காட்சி மலேசியாவில் திரையிடப்பட்டது 

கோலாலம்பூர் 

தளபதி விஜய்யின் 68ஆவது திரைப்படமான THE GREATEST OF ALL TIME திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் மலேசியாவில் அதன் FDFS எனப்படும் முதல் நாள் முதல் காட்சி பிரபல வர்த்தகரும் நடிகருமான டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா@ DSG தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா@ DSG க்கு ஆயிரத்திற்கும் அதிகமான தளபதி விஜய் ரசிகர்கள் ஆராவாரம் செய்து அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

மலேசியாவில் FDFS எனப்படும் முதல் நாள் முதல் காட்சி காலை வேளையில் தொடங்கியது கோட் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம் கோலாலம்பூரிலுள்ள TGV CINEMAS, PAVILLION BUKIT JALIL இல் சிறப்பாக நடைபெற்றது.

காலை மணி 6 முதலே கோட் படத்தின் கொண்டாட்டங்கள் ஆரம்பமானது. கோட் படத்தின் கொண்டாட்டத்தில் நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, கோட் படத்தின் போஸ்டர் பொறிக்கப்பட்ட அணிச்சலை சிறப்பு விருந்தினரான டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா@ DSG வெட்டி இர்ஃபான் ஜைனிக்கு ஊட்டினார். 

GOAT படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்ட நிகழ்ச்சியை VIJAY FANS SQUAD OFFICIAL அமைப்பு அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்த வேளையில் இணை ஏற்பாட்டார்களாக DAK EVOLUTION TRADING இருந்தனர். 

இன்று நடைபெற்ற முதல் நாள் முதல் காட்சியில் அனைத்து  பத்து 10 திரையரங்களிலும் கோட் திரைப்படம் திரையிடப்பட்டது. IMAX, 2D, ATMOS ஆகிய வடிவமைப்பிலும் கோட் திரைப்படம் வெளியானது 

AGS ENTERTAINMENT தயாரித்துள்ள இந்த படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி அமரன், யோகிபாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், மோகன் என அனைவரும் நடித்துள்ளனர். 

மேலும், நம் நாட்டின் உள்ளூர் கலைஞரான இர்ஃபான் ஜைனி கோட் திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் வரும் காட்சிகளில் ரசிகர்கள் அனைவரும் ஆராவாரம் செய்து கொண்டாடினர். கோட் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.கோட் படத்தின் FDFS கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு நம்பிக்கை ஊடகம் அதிகாரப்பூர்வ ஊடகமாகும். 

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset