நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் கோட் படத்தைக் கொண்டாடுங்கள்: விஜய் அறிவுரை

சென்னை:

இன்று செப் 5 ஆம் தேதி நடிகர் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து, கட்சிக் கொடியெல்லாம் வெளியிட்டு, மாநாட்டுக்கும் தயாராகிறார். இந்நிலையில்தான் கோட் திரைப்படம் வெளி வந்துள்ளது. 

இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் படத்தைக் கொண்டாட வேண்டும் என நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். 

கடந்த காலங்களில் திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில், ரசிகர்களின் கொண்டாட்டங்களின் போது, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுவதுண்டு.

அத்தகைய சூழல் இப்போது இருக்க வேண்டுமெனில், தொண்டர்கள் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் நிகழும் சம்பவங்கள், கட்சி வரை எதிரொலிக்கும் என்பதால் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலக்கட்டம் என விஜய் தரப்பு கருதுகிறது.

இதையொட்டியே நடிகர் விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset