நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சூர்யாவின் கங்குவா  திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது: நடிகர் சூர்யா தகவல் 

கோலாலம்பூர்: 

நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுகிறது என்று நடிகர் சூர்யா கூறினார். நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி  இணைந்து நடிக்கும் மெய்யழகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யாக இவ்வாறு கூறினார் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. 

இதற்கு முன் கங்குவா, வேட்டையன் என இரு திரைப்படங்களும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கங்குவா திரைப்படம் நவம்பர் மாதத்திற்கு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. 
 
2.5 ஆண்டுகள் கடும் உழைப்பு காரணமாக கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. ஆக, ரசிகர்களின் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நடிகர் சூர்யா விளக்கமளித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset