நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

புது டெல்லி:

இந்திய அரசாங்கத்திடம் இருந்து டாடா குழுமம் வாங்கிய ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.2,058.5 கோடி அந்நிய நேரடி முதலீடு செய்வதற்கு இந்திய அரசு அனுமதி அளித்தது.

இதன் மூலம் ஏர் இந்தியா குழுமத்தில் 25.1 சதவீதப் பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமாகியுள்ளன.

மேலும், ஏர் இந்தியா- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இணைந்து நடத்தி வந்த விஸ்தாரா விமான நிறுவனம் ஏர் இந்தியா குழுமத்துடன் இணைக்கப்படுகிறது.

இதனால் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த விஸ்தாரா நிறுவனத்தின் இயக்கம் வரும் நவம்பர் 11ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

ஏர் இந்தியாவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ரூ.2,058.5 கோடி முதலீடு செய்வது உலக அளவில் மிகப்பெரிய விமான நிறுவன முதலீடுகளாக கருதப்படுகிறது.

ஏர் இந்தியாவும், விஸ்டாராவும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset