நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

யுவனிசம் மலேசியாவின் YM GOLD MEMBERSHIP CARD அறிமுகம்: பிரபல நடிகர் டத்தோஶ்ரீ ஜி. ஞானராஜா@ DSG கலந்து சிறப்பிப்பு

கிள்ளான்:

தமிழ்ச்சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மலேசிய ரசிகர் மன்றமான யுவனிசம் மலேசியா சார்பாக YM GOLD MEMBERSHIP CARD  கிள்ளானில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்குப் பிரபல வர்த்தகரும் நடிகருமான டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா@ DSG சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

மலேசியாவில் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள yuvanism malaysia ரசிகர் மன்றம் முதன்முறையாக இந்த முன்னெடுப்பினை எடுத்துள்ளது.

அவ்வகையில், யுவன் சங்கர் ராஜாவின் ரசிகர்களுக்கு இந்த YM GOLD CARD  வழங்கப்பட்டுள்ளது.

மலேசிய விஜய் ஸ்குவாட் பிரதிநிதி, மலேசிய தல அஜித் ரசிகர் மன்றம், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றம், ரஹ்மானியா ரசிகர் வட்டம், சித் ஶ்ரீராம் ரசிகர் பிரதிநிதிகள் என அனைவரும் இந்த YM GOLD MEMBERSHIP CARD ஐ டத்தோஶ்ரீ ஜி.ஞானராஜா@ DSG அவரிடமிருந்து  பெற்று கொண்டனர் 

யுவனிசம் மலேசியாவின் தலைவர் ரிட்சுவான் ஃபரோக் யுவனிசம் மலேசியாவின் நிர்வாகிகளை பொதுமக்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவ்வகையில் துணைத்தலைவராக சாரா பௌலின், செயலாளராக சுரபி, பொருளாளராக கர்னேஷ் சுப்ரமணியம், செயற்குழு உறுப்பினர்களாக, முஹம்மத் ஷாருல், மற்றும் மலிசா ராஜேந்திரன் ஆகியோர் உள்ளனர். 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டமும் நடைபெற்றது. இதில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து பாடல் பாடப்பட்டு கேக் வெட்டப்பட்டது. யுவன் சங்கர் ராஜா சார்பாக பிரபல கலைஞர் டத்தோஶ்ரீ ஜி. ஞானராஜா@ DSG கேக்கை வெட்டினார் 

யுவனிசம் மலேசியாவின் YM GOLD MEMBERSHIP அறிமுக நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமாக நம்பிக்கை ஊடகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset