நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பாலியல் புகார்கள்: ஆதாரம் இருந்தால் தண்டியுங்கள் மோகன்லால்

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் எழுந்துள்ள பாலியல் புகார் விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்தார்.

நீதிபதி ஹேமா குழு அறிக்கையைத் தொடர்ந்து, பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீதான பாலியல் புகார்கள் வெளியாகின்றன.

இந்தப் புகார்களை விசாரிக்க 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.பாலியல் குற்றச்சாட்டால் மோகன்லால் தலைமையிலான மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு ராஜிநாமா செய்தது.

இதைத் தொடர்ந்து, மோகன்லால் முதன்முறையாக இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்.

மலையாள திரையுலகத்தில் தினமும் 20 -30 பிரச்சனைகள் எழுகின்றன.இந்தப் பிரச்னைகளை மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தால் தீர்க்க முடியவில்லை. தவறு செய்தவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

ஹேமா குழு அறிக்கையை வெளியிட்டது அரசின் சிறந்த முடிவு. அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது போன்ற மலையாள திரையுலகில் எந்த அதிகாரக் கும்பலிலும் நான் அங்கம் வகிக்கவில்லை. அத்தகைய கும்பல் இருப்பதைப் பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது' என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset