நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய்யின் G.O.A.T திரைப்படத்தில் உள்ளூர் மலேசிய நடிகர் இர்ஃபான் ஜைனி

கோலாலம்பூர்: 

தளபதி விஜய்யின் 68ஆவது படமானTHE GREATEST OF ALL TIME (G.O.A.T) படத்தில் உள்ளூர் மலேசிய நடிகர் இர்ஃபான் ஜைனி நடித்திருக்கிறார். 

இந்த தகவலை அவரே தனது முகநூல் பதிவின் வழி உறுதிப்படுத்தியுள்ளார். 

G.O.A.T படத்தில் இணைந்தது குறித்து தாம் பெருமகிழ்ச்சி அடைந்ததாகவும் தளபதி விஜய் வரும் காட்சிகளில் தாமும் நடித்துள்ளது தமக்கு கொண்டாட்டம் நிறைந்த உணர்வாக உள்ளது என்று அவர் சொன்னார். 

கடந்த சனிக்கிழமை வெளியான G.O.A.T படத்தின் டிரெய்லரில் வரும் முன்னோட்ட காட்சியில் நடிகர் விஜய் இடம்பெறும் காட்சியில் இர்ஃபான் ஜைனியும் இடம்பெற்றிருந்தார். 

தளபதி விஜய்யின் THE GREATEST OF ALL TIME (G.O.A.T) திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை AGS ENTERTAINMENT நிறுவனம் தயாரித்துள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset