நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய்யின் கோட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது; 17 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துகொண்டிருக்கிறது 

சென்னை: 

தளபதி விஜய்யின் THE GREATEST OF ALL TIME (G.O.A.T) திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த டிரெய்லர் இதுவரை 17 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து YOUTUBE யில் முதல் நிலை TRENDING யில் உள்ளது. 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. 2 நிமிடங்கள் 56 வினாடிகள் வரை இந்த டிரெய்லர் இடம்பெறுகிறது. 

தளபதி விஜய்யுடன் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, ஜெயராம், மீனாட்சி சௌத்ரி, பிரேம்ஜி அமரன் ஆகியோர் நடித்துள்ளனர். 

எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. கோட் படத்தை AGS ENTERTAINMENT நிறுவனம் தயாரித்துள்ளது. மலேசியாவில் FST TRADING லோட்டஸ் குழுமம் வாங்கி வெளியீடு செய்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset