
செய்திகள் வணிகம்
ரஷியாவில் இருந்து ஒரே மாதத்தில் 23,500 கோடிக்கு கச்சா எண்ணெய் வாங்கியது இந்தியா
புது டெல்லி:
ரஷியாவிடமிருந்து ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் ரூ.23,500 கோடிக்கும் அதிகமான கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததன் காரணமாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கைவிட்டன.
இதனால், இந்தியா போன்ற நாடுகளுக்கு சலுகை விலையில் ரஷியாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி வருகின்றன.
ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 1 சதவீதத்திலிருந்து இப்போது 40 சதவீதமாக இந்தியா அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரஷியாவிடம் இருந்து ரூ.23,500 கோடி மதிப்பில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் ரஷியா மாறி உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 22, 2025, 4:05 pm
அமெரிக்காவில் ஐந்து மலேசியர்கள் 214 மில்லியன் அமெரிக்க டாலர் மோசடியில் சிக்கினர்
March 21, 2025, 12:53 pm
66 மணி நேரத்திற்கு இடைவிடாது காயா ராயா பெருநாள் சந்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
March 11, 2025, 9:42 am
அமெரிக்கப் பங்கு விலைகள் கடுமையாக சரிந்தன
March 8, 2025, 4:54 pm
புதிய ரேஞ்ச் ரோவருக்கு இலங்கையில் அதிக டிமான்ட்
March 4, 2025, 2:48 pm
அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது கூடுதலாக 15% வரி: சீனா அறிவிப்பு
February 20, 2025, 5:14 pm
மலிவு விலையில் iPhone 16e
February 13, 2025, 10:48 pm