செய்திகள் தொழில்நுட்பம்
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு இலங்கையில் அனுமதி
கொழும்பு:
இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டத்தின் பிரிவு 17 (2) இன் கீழ் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளதோடு 2024 ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் இந்த அனுமதி நடைமுறைக்கு வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலகப் புகழ்பெற்ற வர்த்தகர் எலான் மஸ்க்கிற்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் இந்தோனேசியாவில் நடைபெற்றது.
எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் வலையமைப்புடன் இலங்கையை இணைப்பதற்கான விண்ணப்ப செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதன் விளைவாக, செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் இணைய வசதி சேவைகளை வழங்க ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள பைபர் தொழிநுட்ப இணைய சேவையை விட இந்த இணைய சேவையானது பல மடங்கு வேகமானது என்பதனால் உலகில் எந்த இடத்திலிருந்தும் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.
இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் தொழில்நுட்பத் துறையில் சிறந்த சூழல் உருவாகும் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
