நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய்யின் G.O.A.T திரைப்படம் IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகிறது: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு 

சென்னை: 

தளபதி விஜய்யின் 68ஆவது படமான THE GREATEST OF ALL TIME (G.O.A.T) திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இத்திரைப்படம் IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான AGS ENTERTAINMENT அறிவித்துள்ளது 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் GOAT திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. 

இந்நிலையில், IMAX தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் வெளியாகும் என்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியீட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். 

இதனிடையே, G.O.A.T திரைப்படத்தின் டிரெய்லர் எதிர்வரும் ஆகஸ்ட் 15 அல்லது ஆகஸ்ட் 19ஆம் தேதிகளில் எதிர்பார்க்கலாம் என்று சொல்லப்படுகிறது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset