நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலேசியாவின் ஏற்றுமதி 18.4 விழுக்காடு அதிகரித்தது: புள்ளிவிவரத்துறை தகவல்

கோலாலம்பூர்:

மலேசியாவின் ஏற்றுமதி அளவானது கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்றம் கண்டுள்ளது. சுமார் 18.4 விழுக்காடு அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிவரங்கள் துறை தெரிவித்துள்ளது.

அதாவது 95.6 பில்லியன் ரிங்கிட் மதிப்பில் ஏற்றுமதிகள் ஏற்றம் கண்டுள்ளதாக அத் துறையின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது உஸிர் மஹிதீன் (Mohd Uzir Mahidin) கூறினார்.

ஏற்றுமதி தொடர்பில் பதிவாகி உள்ள இந்த இரு இலக்க வளர்ச்சிக்கு உள்நாட்டு ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியின் ஆதரவும் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“மொத்த ஏற்றுமதியில், உள்நாட்டு ஏற்றுமதியானது 79.1 பில்லியன் ரிங்கிட்டாக, அதாவது 82.7 விழுக்காடு பங்களிப்பை செய்துள்ளது. இதேபோல் மறு ஏற்றுமதியானது 16.7 விழுக்காடு பங்களிப்புடன் 16.5 பில்லியனாக உள்ளது.

"இதற்கிடையே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆகஸ்ட் மாதம் இறக்குமதி அளவு சுமார் 12.5 விழுக்காடு அதிகரித்து 74.2 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது.

"சிங்கப்பூர், ஜப்பான், அமெரிக்கா, இந்தோனீசியா, ஹாங்காங், ஆஸ்திரேலியா, சீனாவுக்கு அதிக அளவிலான பொருள்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இதன் காரணமாக ஒட்டுமொத்த ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளது. மொத்த ஏற்றுமதியானது 18.4 பில்லியன் ரிங்கிட்டாக உள்ளது," என்றார் முஹம்மது உஸிர் மஹிதீன்.

உலகளவில் பொருளியல் மந்தச் சூழ்நிலை காணப்படும் வேளையில், ஏற்றுமதி அளவு அதிகரித்திருப்பது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது என்கிறார்கள் பொருளியல் நிபுணர்கள்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset