செய்திகள் சிந்தனைகள்
ரத்தத்தை விருத்தி செய்யும் வாழைக்காய்
வாழைக்காய் வாய்வை உண்டு பண்ணும் எனச் சொல்லி உணவில் சேர்த்துக் கொள்ள பலர் தயங்குகிறார்கள்.
ஆனால் இது பல வியாதிகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
உடலில் ரத்தம் குறைந்து பலமிழந்து இருப்பவர்கள் உணவில் வாழைக்காயை எந்த வகை பதார்த்தங்களாகச் செய்து சாப்பிட்டு வந்தாலும் புதிய ரத்தம் விருத்தி ஆகி பலம் ஏற்படும்.
அதுமட்டுமல்லாமல், உஷ்ணம் சம்பந்தமாக இருமல் ஏற்பட்டு கஷ்டப்படுபவர்கள் தினசரி உணவில் வாழைக்காயைச் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறைந்து, விரைவில் குணமடைந்து விடுவார்கள்.
பித்தம் சம்பந்தமான வியாதியினால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைக்காயை சாப்பிட்டு வந்தால் பித்தம் படிப்படியாகத் தணியும்.
அதனையடுத்து, சீதபேதி ஏற்பட்டிருக்கும் சமயம் முற்றிய காயை பில்லை பில்லையாக நறுக்கி மிளகு, உப்பு சேர்த்து, பசுவின் நெய் விட்டு சிவக்க வறுத்து சாப்பிட்டால் சீத பேதி குணமாகும்.
வாழைக்காயை வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கி, உப்பை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து அதில் நறுக்கிய காயை அரை மணி ேநரம் ஊறவைத்து எடுத்து, நெய் விட்டு வறுத்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.
வாழைக்காயைத் துண்டுகளாக நறுக்கி, கொத்தமல்லி, தேங்காய் தேவையான அளவு சேர்த்து அரைத்து, உப்புச் சேர்த்து பிசிறி வைத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு தினசரி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்த சூடு சம்பந்தமான உடற் சூடு தணியும்.
சிலருக்கு வாயில் அதிகமாக எச்சில் ஊறும். இப்படிப்பட்டவர்கள் தினசரி உணவில் வாழைக்காயைச் சாப்பிட்டு வந்தால் உமிழ் நீர் சமப்படும்.
வாழைக்காயை வாய்வு என்று நினைத்து சாப்பிடாமல் இருக்கக் கூடாது. உணவில் அடிக்கடி சேர்த்து, பலவித நோய்கள் ஏற்படாவண்ணம் உடலை காத்துக் கொள்ள வேண்டும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 7:31 am
முப்பெரும் பிரச்சினைகளும் முப்பெரும் தீர்வுகளும் - வெள்ளிச் சிந்தனை
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
