நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஞானவாபி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் நடந்து செல்வதற்கு தடைகோரி மனு: 17ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வாரணாசி:

உத்தர பிரதேசத்தில் உள்ள ஞானவாபி பள்ளிவாசலின் கீழ் உள்ள மீது முஸ்லிம்கள் நடந்து செல்வதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.

காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி ஞானவாபி பள்ளிவாசல் உள்ளது. அவரங்கசீப் உத்தரவின்பேரில், ஏற்கெனவே இருந்த கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறி அதை மீண்டும் கோயிலாக அறிவிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசலுக்கு கீழே வைக்கப்பட்டுள்ள ஹிந்து தெய்வங்களுக்கு பூஜை செய்ய நீதிமன்றம் முன்பே அனுமதி அளித்தது.

பள்ளிவாசலில் நடந்து செல்வதால் கோயிலின் மேற்கூரை பலவீனமாக உள்ளதால் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் நடக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஹிந்துக்கள் தரப்பு வாதத்தை சனிக்கிழமை கேட்ட மாவட்ட நீதிபதி சஞ்சீவ் பாண்டே, அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 17 ஒத்திவைத்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset