
செய்திகள் சிந்தனைகள்
சோதனைதான் ஊக்கம் அளிக்கின்ற டானிக்..! - வெள்ளிச் சிந்தனை
உலகத்தில் இருக்கின்ற சமுதாயங்கள் அனைத்துமே சிரமங்களும் சோதனைகளும் நிறைந்த காலகட்டத்தை கடக்கத்தான் செய்கின்றன.
செழித்தோங்கி நிலைத்துநிற்கின்ற திறனையும் ஆற்றலையும் அவை எந்த அளவுக்குப் பெற்றிருக்கின்றன என்பதை உணர்த்துகின்ற உரைகல்லாகத்தான் அவை பாதையில் எதிர்கொள்கின்ற முட்டுக்கட்டைகளும், சமகாலத்திய சோதனைகளும் இருக்கின்றன.
அவர்களின் இறைவன் அவர்களுக்கு அளித்த ஆற்றல்களும் அவர்களுக்குள் புதைந்து கிடக்கின்ற திறமைகளும் புத்துயிரும் புத்துணர்வும் பெறுவதற்கு அந்தக் கஷ்டங்களும் இழப்புகளும்தாம் உதவுகின்றன.
சமூகங்களின் வாழ்வில் சிக்கல்களும் சிரமங்களும்தாம் ‘புத்துயிரும் புதுத்தெம்பும் அளிக்கின்ற அமிர்தத்தின்’ தகுதிநிலையைப் பெற்றிருக்கின்றன.
வளர்ச்சிப் பாதையில் முந்திக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு உந்துசக்தியாய் இருப்பதும் அவைதாம்.
சோதனைகளுக்கும் சிரமங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆட்படுத்தப்படாத சமூகங்களிடம் நிலைமையைத் திருத்துகின்ற ஆசையும் ஆர்வமும் இருப்பதில்லை.
தம் மீதான நம்பிக்கையையும் அவை காலப்போக்கில் இழந்துவிடுகின்றன.
இன்னும் சொல்லப்போனால் நாள் செல்ல நாள் செல்ல சொகுசான வாழ்க்கைக்கு அடிமையாகிவிடுகின்றார்கள்.
தங்களின் உண்மையான தகுதிநிலையை மறந்துவிடுகின்றார்கள். தேக்கநிலைக்கு ஆளாகி முடங்கிப் போகின்றார்கள். பிறகு வரலாற்றின் ஏடுகளிலிருந்து காணாமல் கரைந்து போகின்றார்கள்’
- மெலானா அபுல் ஹஸன் அலீ நத்வி (ரஹ்)
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm