நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இன்ஃபோசிஸ், ரூ. 32,403 கோடி வரி பாக்கி

புது டெல்லி:

இந்தியாவின் மிகப்பெரிய  தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் ரூ. 32,403 கோடி வரி பாக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

பங்குச்சந்தையில் அந்த நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்கள் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.  வெளிநாட்டு கிளைகள் மூலம் கடந்த 2017 - 2022 வரை மேற்கொள்ளப்பட்ட செலவினங்களுக்கு செலுத்த வேண்டிய ரூ. 32,403 கோடி ஜிஎஸ்டி நிலுவை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கு கர்நாடக மாநில ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் அளி்த்துள்ளனர்.

எனினும், வெளிநாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களின் கிளைகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset