
செய்திகள் கலைகள்
நடிகர் தனுஷை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும்
சென்னை:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், நடிகர் தனுஷை வைத்து புதிய படம் எடுப்போருக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்கனவே நடிகர் தனுஷ் நிறைய தயாரிப்பு நிறுவனங்களிடம் முன்பணம் வாங்கிவிட்டு பிறகு வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி செல்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கினர்.
இந்நிலையில் தயாரிப்பாளர்களின் நலன்களைப் பாதுகாக்க நடிகர் தனுஷிற்கு எதிராக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
மேலும், தயாரிப்பாளர்களிடம் முன்பணம் வாங்கிக்கொண்டு சம்பந்தப்பட்ட படங்களை முடித்த பிறகு தான் மற்ற படத்தின் பணிகளுக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகே, OTT தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பள விவகாரத்தைத் தீர்க்க ஒரு கூட்டு செயற்குழு தயாரிப்பாளர் சங்கத்தின் கீழ் அமைக்கப்படும் என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் குறிப்பிட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 5:31 pm
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிரம் கணக்கு முடக்கம்
July 6, 2025, 12:51 pm
ரசிகர்களின் மனதைக் கிரங்கடித்த HEARTS OF HARRIS - THE FINAL ENCORE இசைநிகழ்ச்சி
July 3, 2025, 10:23 pm
முழங்காலிட்டு பத்திரிகையைப் பெற்று கொண்ட விஜய் சேதுபதி
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm