நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பட்ஜெட் 2024: மக்கள் முதுகில் குத்திவிட்டது ஒன்றிய அரசு

புது டெல்லி:

பட்ஜெட்டில் அதிகபடியான வரிகளை விதித்து சாமானியன் மக்கள் முதுகில் ஒன்றிய அரசு குத்திவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

கடந்த ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை  தாக்கல் செய்தது. பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி மக்களவையில்  பங்கேற்று பேசினார்.

அப்போது பிரதமர் மோடி, ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்ததால், ஆளும்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

அத்துடன், ராகுல் உரையின்போது அவைத் தலைவர் ஓம் பிர்லா அடிக்கடி குறுக்கிட்டு, சில கருத்துகளைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தவும் நேரிட்டது.

ராகுல் மேலும் பேசுகையில், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களை பணமதிப்பிழப்பு, வரி பயங்கரவாதம் ஆகியவற்றின் மூலம் அழித்துவிட்டனர். "வரி பயங்கரவாதத்தை' முடிவுக்குக் கொண்டுவர தற்போதைய பட்ஜெட் எதையும் செய்யவில்லை.

விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் கிடைப்பதை "இந்தியா' கூட்டணி உறுதி செய்யும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நாங்கள் உறுதி செய்வோம். இந்த அரசால் அதிருப்தி அடைந்துள்ள மத்திய தர வகுப்பினர் தற்போது "இந்தியா' கூட்டணி பக்கம் திரும்பியுள்ளனர் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset