நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் தனுஷின் 50ஆவது படம் ராயன்: இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

கோலாலம்பூர்: 

நடிகர் தனுஷின் 50ஆவது படமான ராயன் இன்று ஜூலை 26ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 

நடிகர் தனூஷின் 50ஆவது படம் என்பதால் அவரே இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

ராயன் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் கிஷன், அபர்னா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் செல்வராகவன் ஆகியோர் நடித்துள்ளனர். 

மலேசியாவில் ராயன் திரைப்படத்தைப் பிரம்மாண்டத்தின் அடையாளம்  DMY CREATIONS நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது. 

தனுஷின் 50ஆவது படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset