நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

நீரிழிவு நோயாளிகள் அரிசி உணவுகளை உண்ணலாமா?

நீரிழிவு நோயாளிகள் அரிசி உணவைச் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் அதிகரிக்கும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

நீரிழிவு நோயாளிகள்  அரிசி உணவை உண்பது நல்லதா? அல்லது அல்லது கோதுமை உணவை உண்பது நல்லதா? என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில், நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாகக் கோதுமை உணவைத் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

60 கிராம் அரிசியில் 80 கலோரிகள், 1 கிராம் புரதம், 18 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.

கார்போஹைட்ரேட் அளவை ஒப்பிடும்போது அரிசி மற்றும் கோதுமையில் ஏறக்குறைய ஒரே அளவு இருந்தாலும், கோதுமையில் சோடியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் பி1, பி2, நியாசின், ஃபோலேட், நார்சத்து, புரதம் ஆகியவையும் அரிசியை விட அதிகம் இருக்கின்றது.

மேலும் அரிசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு (கிளைசிமிக் இன்டெக்ஸ்) 72 ஆகும். இது கோதுமையின் கிளைசிமிக் இன்டெக்ஸான 45 விட அதிகம் என்பதால் சர்க்கரை சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி ஏற்ற உணவாக பொதுவாக கருதப்படுவதில்லை.

இருப்பினும் சர்க்கரை உயர்தல் குறியீடு அரிசியின் வகைகளை பொறுத்து மாறுபடும். 

சிகப்பு அரசியின் சர்க்கரை உயர்தல் குறியீடு கோதுமையின் சர்க்கரை உயர்தல் குறியீடு போலவே மிகக் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் சிவப்பு அரிசியைத் தாராளமாக சாப்பிடலாம்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset