
செய்திகள் சிந்தனைகள்
உடல் எடையைக் குறைத்தல், தகுந்த காலணிகளை அணிதல் போன்ற நடவடிக்கை குதிக்கால் வலியைத் தீர்கும்
பாதத்தைத் தரையில் வைக்கவே பயப்படும் அளவுக்கு குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் பல பேர் உள்ளனர். நமது பாதத்தில் குதிகால் எலும்பிலிருந்து கட்டை விரலை நோக்கிச் செல்லும் டிஷு உள்ளது. இந்தத் டிஷு நமது உடல் எடையைத் தாங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
14 சதவீதம் உடல் எடையை அது தாங்குகிறது. இதனை அதிகமாகப் பயன்படுத்தும்போது அந்தத் டிஷு குதிகால் எலும்போடு இணையும் இடத்தில் ஒருவித அழற்சி ஏற்பட்டு, உள்வீக்கம் உருவாகிறது. இதனால் குதிகால் வலி ஏற்படுகிறது.
சிலருக்குக் குதிகால் எலும்பு டிஷு சேருமிடத்தில் எலும்பு வளர்ச்சி ஏற்படும். இதற்கு கால்கேனியல் ஸ்பர் என்று பெயர். இதனாலும் குதிகால் வலி ஏற்படலாம்.
மேலும் ரத்தத்திலுள்ள யூரிக் அமிலம் அதிகமாதல், முடக்குவாதம், காசநோய், தட்டைப் பாதம், பிறவிக்குறைபாடு உள்ள பாதம், எலும்புத் திண்மைக் குறைவு நோய் போன்ற பல காரணங்களாலும் குதிகால் வலி ஏற்படும்.
யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவர் நாம் நடப்பதற்கு கெண்டைக்கால் தசை, குதிகால் ஜவ்வு, குதிகால் எலும்பு, பாதத் திசுக்கொத்து, பாதத்தில் உள்ள தசைகள் உதவுகின்றன.
இவற்றில் ஏதாவது ஒன்றின் வேலை சரியாக இல்லையென்றாலும் வலி உண்டாகிறது.
உடல் பருமன் அதிகமானால் தொடர்ந்து நீண்ட நேரம் நிற்பவர்கள் பிறவியிலேயே தட்டையான பாதம் உள்ளவர்கள் பலவீனமான கெண்டைக்கால் தசை கணுக்கால் மேல்நோக்கிய இயக்கக் குறைபாடு உள்ளவர்களுக்குக் குதிகால் வலி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மருத்துவர், நோயாளி கூறும் வலியின் வரலாறு மற்றும் தன்மையை வைத்து அறியலாம்.
சிறப்பு ரத்தப் பரிசோதனையின் மூலம் HLA, B27, ருமடாய்டு காரணி, யூரிக் அமில அளவு மற்றும் கிருமித் தொந்தரவு வாய்ப்பை அறியமுடியும்.
பெரும்பாலும் குதிகால் வலி தானாகவே சரியாகக்கூடிய மிகச் சாதாரண பிரச்னை.
முதலில் வாழ்வியல் முறையை மாற்றலாம், அதாவது உடல் எடையைக் குறைத்தல், தகுந்த காலணிகளை அணிதல், குதிகால் பயிற்சி, தொடர்ந்து நிற்பதைத் தவிர்த்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
ஓய்வு மற்றும் மிதமான வலி நிவாரண மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் எடுத்துக்கொள்ளலாம்.
வலி அதிகமாக இருப்பின் பாதிக்கப்பட்ட திசுக்கொத்தில் ஸ்டீராய்டு ஊசி செலுத்தி வலியைக் குறைக்கலாம். இயன்முறை மருத்துவ முறையில் (அல்ட்ராசோனிக் தெரபி) மூலம் பயன் பெறலாம்.தீராத குதிகால் வலிக்குச் சில நேரங்களில் திசுப்படலக் கீறல் பயன் தரும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm