நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் தேவ் இயக்கத்தில் அபிநயா உள்ளூர் திரைப்படம்: ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகிறது 

கோலாலம்பூர்: 

ALGEBRA FILMS தயாரிப்பில் இயக்குநர் தேவ் இயக்கத்தில் கர்ணன் கணபதி, ஹம்சினி பெருமாள் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிநயா உள்ளூர் திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகிறது. 

மேலும் இந்த படத்தில் பிரபல காமெடி நடிகரான சத்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் முழுக்க முழுக்க காமெடி, ரொமென்டிக் ஜானரில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. 

படத்தின் இசையமைப்பாளராக JD பணியாற்றியுள்ளார். முரளிகிருஷ்ணன் முனியன் ஒளிப்பதிவாளர் செய்துள்ள நிலையில் படத்தை சந்தியா தாமோதரம் மற்றும் தேவ் ஆகியோர் தயாரித்துள்ளனர். 

முன்னதாக, அபிநயா திரைப்படத்தின் சிறப்பு காட்சி TGV PAVILLION BUKIT JALIL யில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset