நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு பாரிஸ் நகரின் மத்திய பகுதிக்குள் நுழைய வாகனங்களுக்குத் தடை

லண்டன்: 

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள செயின் ஆற்றில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமடைந்துள்ளன.

ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த வாரம் 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கின்றன.

அதற்காகப் பாரிஸ் நகரின் மத்தியப் பகுதியை அதிகாரிகள் மூடத் தொடங்கியுள்ளனர்.

அடுத்த வாரம் வியாழக்கிழமை காலை 5 மணிக்கு ஆற்றோரத்தில் 6 கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுப்பு நடைபெறும். 

அதனால் அந்தப் பகுதியில் வாகனங்கள் நுழைய அனுமதியில்லை.

மெட்ரோ ரயில் நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படும்.

"grey zone" எனும் உயர் பாதுகாப்புமிக்க பகுதிக்கு நுழைய விரும்பும் குடியிருப்பாளர்கள், சுற்றுப்பயணிகள் அல்லது ஹோட்டல் விருந்தினர்கள் QR குறியீடு கொண்ட அனுமதி அட்டைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

தொடக்க விழாவுக்கு 10 மில்லியன் பார்வையாளர்கள் திரள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதாக AFP கூறுகிறது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset