செய்திகள் விளையாட்டு
“சஞ்சு சாம்சன் ஆடியது வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸ்”: இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறாது என்று கூறிய முன்னாள் பாக்கிஸ்தான் வீரர் ஆமீர் புகழாரம்
புதுடெல்லி:
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது இந்திய அணி. மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் இது சாத்தியமானது.
இந்நிலையில், இந்தியாவின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன் குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் முஹம்மது ஆமீர் புகழ்ந்து பேசியுள்ளார்.
முன்னதாக, இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறாது என ஆமீர் தெரிவித்திருந்தார். இந்திய அணி அவரது கருத்தை மாற்றியுள்ளது. இதையடுத்து அவரை சமூக வலைதளத்தில் கடுமையாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.
“எல்லோரும் நான் சொன்னது தவறு என இந்திய அணி நிரூபித்துள்ளதாக சொல்கிறீர்கள். ஆனால், யாரை நாம் புகழ வேண்டும் என்பதை பாருங்கள். சஞ்சு சாம்சன் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தி உள்ளார். அவரது ஆட்டத்தை ஐபிஎல் உட்பட பல்வேறு இடங்களில் பார்த்துள்ளேன்.
ஆனால், கட்டாய வெற்றி என்ற நெருக்கடி மிகுந்த போட்டியில் சஞ்சுவின் ஆட்டம் ரொம்பவே ஸ்பெஷல்.
ஆனால், இந்திய அணியின் ஆட்டம் எப்படி என்று பார்த்தால் மிகவும் மோசமாக உள்ளது. களத்தில் கேட்ச்களை நழுவ விடுகின்றனர். பும்ராவை தவிர மற்ற அனைத்து பவுலர்களும் ரன்களை கொடுக்கின்றனர்” என அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 4-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
அதையடுத்து 5-ஆம் தேதி அன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
ரொனால்டோவுக்கு பிரஸ் தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது
March 13, 2026, 9:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 12, 2026, 8:46 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
