நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

FAM-க்கு மீண்டும் அபராதம் விதித்தது AFC

கோலாலம்பூர்: 

சர்வதேச நட்பு போட்டி (Tier 2) அனுமதி விண்ணப்பத்தைத் தாமதமாக சமர்ப்பித்ததன் காரணமாக மலேசிய கால்பந்து சங்கத்திற்கு (FAM) 1250 அமெரிக்க டாலர் (RM4,900) அபராதம் விதித்துள்ளது.

பிப்ரவரி 25 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் AFC ஒழுங்குமுறைக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி நெகிரி செம்பிலன் எஃப்சி (NSFC), திமோர் லெஸ்டே இடையேயான நட்புரீதியான போட்டி இந்தக் குற்றத்தில் ஈடுபட்டது.

இதேபோன்ற தவறுக்காக FAM மீது விதிக்கப்படும் இது நான்காவது அபராதமாகும்.

இதற்கிடையில், அனைத்து இந்தோனேசிய கால்பந்து சங்கம் (PSSI), சவுதி அரேபியா கால்பந்து கூட்டமைப்பு (SAFF), உஸ்பெகிஸ்தான் கால்பந்து சங்கம் (UFA), தென் கொரியா கால்பந்து சங்கம் (KFA). ஆகிய அமைப்புகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அந்தப் போட்டியில், பயிற்சியாளர் நிட்சம் ஜமீல் வழிநடத்திய நெகிரி செம்பிலன் எஃப்சி அணி, திமோர் லெஸ்டே அணியை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
அதில், தேசிய அணியின் முன்னணி வீரர் லுக்மான் ஹக்கீம் ஷம்சுதீன் இரண்டு கோல்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset