நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

PMCARES திட்டத்தில் 51% விண்ணப்பங்கள் நிராகரிப்பு

புது டெல்லி:

கொரோனாவுக்கு  பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான பிரதமர் மோடியின் pmcares திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமார் 51 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2020ம் ஆண்டு முதல் 2023 மே 5ம் தேதி வரையிலான காலகட்டத்தில், கொரோனாவால் பெற்றோர், சட்டபூர்வ பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் pmcares திட்டம்  தொடங்கப்பட்டது.

இத் திட்டத்தின்கீழ்  9,331 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சுமார்  51 சதவீதம், அதாவது 4,781 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 18 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்களை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset