
செய்திகள் சிந்தனைகள்
சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸ் உண்ணலாமா?
சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது.
100 கிராம் ஓட்ஸில் கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து, 68 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் புரதம் மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இருக்கின்றன.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி சாப்பிட்ட பின் ரத்தத்தில் குளுக்கோஸ் உடனே உறிஞ்சப்படுவதைத் தடுக்கிறது.
இதிலுள்ள பீட்டா குளுகான் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும், அவான்என்திரமைட் என்ற அல்கலாய்டு செல்களில் அழற்சியைத் தடுப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஓட்ஸ் சாப்பிட்டும்போது வயிறு நிரம்பிய உணவு ஏற்படுவதால் பசி குறைந்து, அடிக்கடி நொறுக்கு தீனிகளைச் சாப்பிடுவதை தவிர்க்க உதவும்.
இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவு.
ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஓட்ஸைப் பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்ஸை அறியாமையால் வாங்கி உட்கொண்டு, ஆரோக்கித்துடன் இருப்பதாகக் கருதுகின்றனர்.
இது முற்றிலும் தவறு. ஓட்ஸில் ஸ்டீல்கட்ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஒட்ஸ் என்று மூன்று வகை உள்ளது.
இதில் பதப்படுத்தப்படாத ஓட்ஸ் ஸ்டீல்கட்ஓட்ஸ் ஆகும்.இதன் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் 53.
கொஞ்சம் பதப்படுத்திய ரோல்டு ஓட்ஸின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 57 ஆகும்.
மூன்றாவது வகையான இன்ஸ்டன்ட் ஓட்ஸ் அதிகமாக பதப்படுத்தப்பட்டுத் தயாரிக்கபடுவதால், இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் 83 என்ற மிக அதிகமான அளவை அடைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு இதை சாப்பிட்டவுடன் உடனே ரத்த சர்க்கரையை அதிகரிக்க செய்கிறது.
ஆகையால் சர்க்கரை நோயாளிகள் ஸ்டீல் கட் ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இன்ஸ்டன்ட் ஓட்ஸின் கிளைசீமிக் இன்டக்ஸ் மிக அதிகமென்பதால், இதனை உட்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
அடுத்த முறை கடையில் ஓட்ஸ் வாங்கும் பொழுது ஸ்டீல் கட் ஓட்ஸ் அல்லது ரோல்டு ஓட்ஸை வாங்கிப் பயன்படுத்துங்கள்.
இன்ஸ்டன்ட் ஓட்ஸைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm