நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு கூடுதல் விமான சேவை: பாத்தேக் ஏர் வழங்குகிறது

திருச்சி:

திருச்சியில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சேவைகளை இயக்க பாத்தேக் ஏர் விமான நிறுவனம் முன்வந்துள்ளது.

இதனால் திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அதிக பயணிகளை கையாளும் விமான நிலையங்களில் சென்னையை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது.

பாத்தேக் ஏர் நிறுவனம்  திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு  தற்போது விமான சேவைகளை தினசரி வழங்கி வருகிறது.

இந்நிலையில் திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் விமானம் பயணிகளில் கூட்டம் நிரம்பி செல்வதால் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

மலேசியாவிற்கான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து அதிகரிப்பதால் விரைவில் மலேசியாவின் பாத்தேக் ஏர் விமான நிறுவனம் கோலாலம்பூர், திருச்சிக்கு இடையே தனது விமான சேவைகளை தினசரி 2 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தற்போது இந்த வழித்தடத்தில் தினசரி ஒரு விமான சேவையானது திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset