
செய்திகள் மலேசியா
அரசியலமைப்பை அன்வார் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை: முஹைதின் சாடல்
பெட்டாலிங் ஜெயா:
கூட்டரசு அரசியலமைப்பில் ஒரு பகுதியை மட்டுமே படித்துள்ளதாகக் கூறிய அன்வாரின் கூற்றை முன்னாள் பிரதமர் முஹைதின் விமர்சித்தார்.
நான் அரசியலமைப்பின் ஒரு பகுதியை மட்டுமே படித்தேன் என்று அன்வார் கூறினார்.
தான் படிக்காத எந்தப் பகுதியை அன்வார் படித்தார் என்று முஹைதின் கேள்வி எழுப்பினர்.
அரசியலமைப்பின் விதிகளைத் தாம் சரியாகப் படித்துப் புரிந்திருப்பதாகவும் அன்வாருக்குத் தான் கூட்டரசு அரசியலமைப்பு சரியாக புரிந்திருக்கவில்லை என்றார் முஹைதின்.
முன்னதாக, பிரதமருக்கு ஆதரவு தெரிவித்த ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளைக் காலி செய்ய கோரிய பெர்சத்துவின் விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு சபாநாயகர் ஜோஹாரி அப்துல் சட்டத்தின் முழு விளக்கத்தையும் அளித்ததாக அன்வார் கூறினார்.
ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்வாரின் நிர்வாகத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதன் மூலம் கட்சியின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியத் தவறியதாக அவர் கூறினார்.
எனவே, அரசியலமைப்பின் பிரிவு 10.4 இன் விதிகளின்படி பெர்சத்துவில் அவர்களின் உறுப்பினர் தகுதி ரத்து செய்யப்பட வேண்டும்.
அரசியலமைப்பின் 49A இன் படி மக்களவையில் அவர்களின் தொகுதி காலியாக இருக்கும் என்று முகைதீன் விளக்கினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm