நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொறுப்பில் இருப்பவர்கள் தான் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும்: டத்தோ நெல்சன்

கோலாலம்பூர்:

பொறுப்பில் இருப்பவர்கள் தான் கின்றாரா தமிழ்ப்பள்ளி விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும் மஇகா அல்ல என்று மஇகா உதவித் தலைவர் டத்தோ நெல்சன் கூறினார்.

கின்றாரா தமிழ்பள்ளி பிரச்சினை குறித்து மஇகா தான் ஆரம்பத்தில் கேள்வி எழுப்பியது.

ஆனால் இப்போது அந்த விவகாரத்தில் பொறுப்பில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டுள்ளனர்

அவர்கள் நினைத்தால் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு கண்டுவிடலாம்.

ஆக அங்கு சென்று பத்தோடு பதினொன்றாக குரல் கொடுக்க மஇகாவுக்கு விருப்பமில்லை.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டாலும் மஇகாதான் செய்தது என்று யாரும் சொல்லவும் மாட்டார்கள்.

மேலும் இணைய பகடிவதைக்கு இலக்கான ஈஷா மரணமடைந்த விவகாரம் மஇகாவுக்கு வேதனையளிக்கிறது.

இன்னும்கூட நாம் மாறவில்லை என்றால் இந்த பகடிவதையை ஒழிக்க முடியாது.

காரணம் இணைய பகடிவதையில் யாரும் சிக்கக் கூடாது என மஇகாவே பல விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டது.

இருந்தாலும் பிள்ளைகளும் பெற்றோர்களும் இன்னும் இந்த விவகாரத்தில் அலட்சியமாக உள்ளனர் என்று டத்தோ நெல்சன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset