நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரமலான் சந்தைக்கான அனுமதிகளைப் பெற முகவர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்: பிரதமர்

கோலாலம்பூர்:

ரமலான் சந்தைக்கான அனுமதிகளைப் பெற முகவர்களைப் பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

இந்த ஆண்டிற்கான ரமலான் சந்தை அனுமதி விண்ணப்பங்களுக்கான ஆன்லைன் பதிவை நடத்திய பெட்டாலிங் ஜெயா நகர சபையின் உள்ளூர் அதிகாரிகள் முன்மாதிரியாக  பின்பற்ற வேண்டும்.

ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் லாபம் ஈட்டும் முகவர்கள் மூலம் ரமலான் சந்தை அனுமதிகள் வழங்கப்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

பெட்டாலிங் ஜெயா நகராண்மைக் கழகம் அதன் செயல்படுத்தலுக்கு ஒரு எடுத்துக்காட்டும்  இது மிகவும் வெளிப்படையானது.

இணைய பதிவு, முகவர்கள் மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

ரமலான் சந்தை என்பது மக்கள், குறிப்பாக கீழ் மட்டத்தில் உள்ளவர்கள், வணிகம் செய்வதற்கும், கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கும் ஒரு வாய்ப்பாகும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset