
செய்திகள் மலேசியா
பிரதமர் எப்போதும் இந்திய சமூகத்தின் வெற்றி, முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பார்: டத்தோ ரமணன்
கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எப்போதும் இந்திய சமூகத்தின் வெற்றி, முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிப்பார்.
தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ஆர். ரமணன் இதனை கூறினார்.
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் பிரச்சனைகளை கையாள்வதில் அரசாங்கம் மிகவும் சீரான கொள்கை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் நமது அரசு இந்தியர்கள் தொடர்பான அனைத்து திட்டங்களின் வெற்றி, முன்னேற்றத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது.
இந்தியர்கள் தொடர்பான அனைத்து திட்டங்களும் அதிகாரம், கூடுதல் மதிப்பு கொண்டதாக இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்.
இதன் அடிப்படையில் தெக்குன் ஸ்பூமி கோஸ் பிக் திட்டத்தின் கீழ் கூடுதலாக 30 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியாரின் பெண் திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட், பேங்க் ரக்யாத் பிரிவ்-ஐ திட்டத்தின் கீழ் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசு கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்காக மொத்தம் 130 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2008 முதல் 2024ஆம் ஆண்டு வரை தெக்குனில் கீழ் எந்தவொரு கூடுதல் நிதியும் ஒடுக்கப்படவில்லை.
ஆனால் கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினருக்கு ஒற்றுமை அரசும், பிரதமரும் மட்டுமே அக்கறை காட்டி, அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
இதனை யாரும் மறுக்க முடியாது என்று டத்தோ ரமணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 4:41 pm
எடுத்தோமா கவிழ்த்தோமா என்று முடிவு எடுக்க மித்ரா கத்திரிக்காய் வியாபாரம் அல்ல: பிரபாகரன்
July 5, 2025, 12:19 pm
துப்பாக்கிச் சூட்டில் இருவர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்
July 5, 2025, 12:12 pm
பிரேசிலுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் தொடங்கியுள்ளார்
July 5, 2025, 12:11 pm