நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் வரும் அக்டோபர் மாதம் முதல் தகுதிபெறும் அரசு ஊழியர்களுக்கு 'FlexiGrow' திட்டத்தின்கீழ் 500 வெள்ளி வழங்கப்படும்: அமைச்சர் சான் சுன் சிங் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் வரும் அக்டோபர் மாதம் முதல் ஒவ்வோர் ஆண்டும் தகுதிபெறும் அரசு ஊழியர்களுக்கு 500 வெள்ளி அனுகூலம் வழங்கப்படவிருக்கிறது.

பொதுச் சேவைத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் அதனைத் தெரிவித்தார்.

அந்தத் தொகை 'FlexiGrow' திட்டத்தின்கீழ் வழங்கப்படும்.

இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து புதிய திட்டம் நடப்புக்கு வரும்.

அத்துடன் அடுத்த ஆண்டு 150,000 க்கும் மேற்பட்ட அதிகாரிகள், வெளிநோயாளிகள்-சிகிச்சைக் கட்டணத்தில் கூடுதல் கழிவுகளைப் பெறுவர்.

அவர்கள், தனியார் மருந்தகங்களுக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும் 50 வெள்ளி வரை மருத்துவக் கழிவையும் பெறலாம்.

பல்-சிகிச்சைக்கு ஆண்டுதோறும் 250 வெள்ளிவரை கழிவு கிடைக்கும்.

அந்த விவரங்களை அறிவித்த திரு சான் அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கவும், அவர்களின் நல்வாழ்வையும் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு திட்டங்கள் கொண்டுவரப்படுவதாகக் கூறினார்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

+ - reset