நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மனைவி வெளியூரில் இருக்க புதிதாக திருமணம் செய்ய நகை கடையில் திருடிய  ஆடவர் கைது

ஜகர்த்தா : 

மனைவி வெளியூரில் வேலை செய்யும்பொழுது தனது காதலியைத் திருமணம் செய்ய மத்திய ஜாவா வட்டாரத்தில் உள்ள நகை கடையில் திருடிய ஆடவரை காவல்துறை கைது செய்தது. 

37 வயது நிரம்பிய அவர், நகைகளை வாங்குவது போல் பாசாங்கு செய்தப் பிறகு துப்பாக்கியைக் கொண்டு அங்குள்ள தொழிலாரை அடித்தார்.

பிறகு, 153 மில்லியன் மதிப்புள்ள 26 தங்க நகைகளை எடுத்து மோட்டார் வண்டியில் ஓடிவிட்டார். 

இறுதியாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுராபாயவில் உள்ள அவரது வீட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.   

மனைவி வெளியூரில் இருக்க, தனது காதலியை திருமணம் செய்வதற்காக அவ்வாறு செய்தேன் என்று, காவல் அதிகாரியிடம் அவர் கூறினார்.  

-தர்மாவதி & மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset