நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

170 ஆண்டுகளில் முதல் முறையாக  இங்கிலாந்து  அரச முத்திரையை இழந்த Cadbury

லண்டன்:

 Cadbury சாக்லெட் நிறுவனம் இங்கிலாந்து அரச முத்திரையை இழந்துள்ளது.

170 ஆண்டுகளில் முதல்முறையாக Cadburyக்கு அந்நிலை ஏற்பட்டுள்ளது.

அரச முத்திரையைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள், அரச குடும்பத்துக்குப் பொருள்களையும் சேவைகளையும் வழங்குகின்றன.

அந்த நிறுவனங்கள், அரச முத்திரையை விளம்பரங்களில் பயன்படுத்தலாம்.

1854இல் விக்டோரியா மகாராணி அந்த முத்திரையை Cadbury நிறுவனத்திற்கு வழங்கினார்>

ஆனால் மன்னர் சார்ல்ஸ் ஆட்சியின் கீழ் நிறுவனம் முத்திரையை இழந்துள்ளது.

அது குறித்து Mondelez International எனும் Cadburyஇன் உரிமையாளர் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது.
விளம்பரம்

ரஷ்யாவில் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கும் நிறுவனங்களிடமிருந்து அரச முத்திரையை அகற்றும்படி B4Ukraine எனும் பிரசாரக் குழு மன்னர் சார்ல்ஸிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

ரஷ்யா-உக்ரேன் போர் காரணமாக அந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset