நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அசர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்து: நாடு முழுதும் துக்கம் அனுசரிப்பு

பாக்கு: 

அசர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானதற்கு அஞ்சலி செலுத்த இன்று நாடு முழுதும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

நேற்று,  டிசம்பர் 25-ஆம் தேதி நேர்ந்த விமான விபத்தில் 38 பேர் மாண்டனர்.

அசர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியேவ் (Ilham Aliyev) ரஷ்யாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

விபத்தின் காரணமாக அவர் பயணத்தை ரத்துச் செய்திருக்கிறார்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய உடனடியாக விசாரணை நடத்தும்படி திரு அலியேவ் கேட்டுக்கொண்டார்.

"விபத்தில் மாண்டோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமுற்றோர் உடனடியாகக் குணமடைய வேண்டுகிறேன்," என்று அவர் சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

விமானத்தில் மொத்தம் 67 பேர் இருந்தனர். அவர்களில் 3 பிள்ளைகள் உட்பட 29 பேர் உயிர் பிழைத்தனர்.

காயமுற்றவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset