
செய்திகள் சிந்தனைகள்
கவி கா.மு. ஷெரீப் காலமான தினமின்று
கா மு ஷெரீப் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
ஆனாலும் கா.மு.ஷெரீப் தமிழக மக்களிடையே மிகவும் புகழ் பெற்றதற்குக் காரணம் அவரது திரைப்படப் பாடல்களே என்றால் அது மிகையில்லை. நாநூறுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை அவர் இயற்றியுள்ளார். அவரது முதல் பாடல் இடம்பெற்ற படம் ‘பொன்முடி’. காலத்தால் நிலைத்து நிற்கும் கா.மு.ஷெரிப்பின் பாடல்களை இங்கே பட்டியலிட இடம்போதாது.
என்றாலும் சில:
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?,
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…,
வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,
ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?,
அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா, உலவும் தென்றல் காற்றினிலே,
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே... ..
ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும் அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர்பண்பு கவிஞர் கா.மு. ஷெரீப்பிடம் இருந்ததுஒரு கவிஞன் வறுமையிலும் செம்மையாக எப்படி வாழ்வதென்பதை அவரிடமிருந்து நான் பயின்றேன்.
கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லிமாக இருந்தபோதிலும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.
கள் வியாபாரம் செய்பவன் கள் அருந்த மாட்டான். அதுபோல் கசாப்பு வியாபாரம் செய்பவன் கறி சாப்பிட மாட்டானா?
கவிஞர் ஷெரீப் கறி வியாபாரம் செய்பவராக இருந்தாலும் இருப்பாரே ஒழிய புலால் சாப்பிடமாட்டார்.
ஷெரீப் புகை பிடிப்பதில்லை. நான் அவர் எதிரில் ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகை பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன்” என்று ஷெரீப்பின் நற்பண்புகளைப் பட்டியலிட்டார் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm