நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

2019-இல் வெளியான என்ஆர்சி இறுதியானது: வெளிநாட்டினர் தீர்ப்பாயம்

குவாஹாட்டி:

கடந்த 2019ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) இறுதியானது என்று அஸ்ஸாமில் உள்ள வெளிநாட்டினர் தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இதை இந்திய பதிவாளர் இயக்குநரகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

அஸ்ஸாமில் குடியேறி வசிப்பவர்களை அடையாளம் காண்பதற்காக, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டது. கடந்த 2018}ஆம் ஆண்டில் வெளியான அதன் வரைவுப் பட்டியலில் சுமார் 40 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டில் வெளியான இறுதிப் பட்டியலில் 19 லட்சம் பேர் விடுபட்டிருந்தனர். பதிவேட்டில் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்காக விண்ணப்பித்திருந்த 3.3 கோடி பேரில் 3.11 கோடி நபர்களின் பெயர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றன.

Assam NRC Final List 2019: Check Status Online at www.assam.gov.in,  www.nrcassam.nic.in, ceoassam.nic.in, www.assam.mygov.in, How to Check Know  here

எனினும், குடிமக்களைக் கணக்கிடும் விவகாரத்தில் குளறுபடிகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, இறுதிப் பட்டியல் மறுஆய்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் அதற்கான நடைமுறைகள் தொடங்கப்படவில்லை. என்ஆர்சி இறுதிப் பட்டியலை மறுகணக்கீடு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, அஸ்ஸாமின் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் சிங்கா என்பவர் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த வெளிநாட்டினர் தீர்ப்பாயம் தனது உத்தரவில் "சம்பந்தப்பட்ட நபரின் பெயர் என்ஆர்சி இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், அவர் இந்திய குடிமகனாகவே கருதப்படுவார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஆர்சி இறுதிப் பட்டியல் கடந்த 2019}ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்தாலும், அதில் சுமார் 19 லட்சம் பேர் விடுபட்டிருப்பதால் அப்பட்டியல்தான் இறுதியானதா என்பது குறித்து இந்திய பதிவாளர் இயக்குநரகம் இன்னும் எந்தவித விளக்கத்தையும் அளிக்கவில்லை. 

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset