நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பேராக்கில் மீண்டும் கொஞ்சும் சலங்கை 2024 

ஈப்போ: 

ஸ்வரலயா சங்கீத கலாலயம் (SSK) இவ்வாண்டு "கொஞ்சும் சலங்கை 2024" மூலம் மீண்டும் பரதநாட்டிய இரசிகர்களை சந்திக்கவுள்ளனர். இதில் 30 நடனமணிகளின் பரதநாட்டிய படைப்பு இரசிகர்களை கவரும். ஆகவே இந்நிகழ்வினை காண பொதுமக்களை அன்போடு அழைப்பதாக ஸ்வரலயா சங்கீத கலாலய குருவும், ஏற்பாட்டுக்குழு தலைவருமான டாக்டர் பண்பரசி கோவிந்தசாமி கூறினார்.

இந்த கொஞ்சும் சலங்கை நிகழ்வு, ஈப்போ பொலிடெக்னிக் உங்கு ஒமர் (PUO) மண்டபத்தில் வரும் 22.6.2024 (சனிக்கிழமை), மாலை 6.00 க்கு தொடங்கவுள்ளது. இந்நிகழ்வு பேராக் கேரிங் அசோசியேஷன் (PCA), இந்து இளைஞர் அமைப்பு குனோங் ராபாட் மற்றும் நவிரா மெடித்தெக்(Navira Meditech Sdn Bhd) ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து எஸ்.எஸ்.கே. படைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகர்களாக டாக்டர் ஷம்சூரி அப்துல்லா (PUO இயக்குநர்), பேராசிரியர் டாக்டர் உலகநாயகி பழனி (இந்தியா), மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரையா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் முத்தாய்ப்பு அங்கமாக 4 வயது முதல் மூத்த நடனமணிகள் தாங்கள் நடுவு செய்த செடிகளை பிரமுகர்களுக்கு நினைவு சின்னமாக வழங்கவுள்ளனர். சுற்றுச்சூழலை பாதிகாக்க தாவரங்களை நடவு செய்து பேணி காப்போம் என்ற பிரச்சாரத்திற்கு முன்னுதரணமாக இத் திட்டம் அமையவுள்ளது என்று அவர் மகிழ்வுடன் கூறினார்.

அதுமட்டுமின்றி, இந்நிகழ்வில் சித்தியவான் மகா கணேசா தமிழ்ப்பள்ளி, ஈப்போ சென் பிலோமினா தமிழ்ப்பள்ளி, சுங்கை தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை உபகரணங்கள், பாய், காற்றாடி போன்ற பொருட்கள் வழங்கி உதவிகள் செய்யப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன், மனிதநேய உதவியாக பொலிதெக்னிக் உங்கு ஓமாரில் பயிலும் பி40 இந்திய மாணவர்களுக்கு மடிக்கணினி உதவிகள் வழங்கப்படும் என்று அவர் கருத்துரைத்தார்.

இந்த கொஞ்சும் சலங்கை நிகழ்விற்கு டிக்கெட் விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்த டிக்கெட் விலை 10 ரிங்கிட் மற்றும் 50 ரிங்கிட் மட்டுமே. இந்த டிக்கெட்டை மண்டபத்தின் நுழைவாசலில் வாங்கிக்கொள்ளலாம். கூடுதல் தகவலுக்கு 013-6702395 டாக்டர் கோ. பண்பரசியை தொடர்புக்கொள்ளலாம்.

 - ஆர். பாலச்சந்தர் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset