செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு இரவில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை:
சென்னையில் அடுத்த 2 நாள்களுக்கு ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
17.06.2024 முதல் 21.06.2024 வரை அடுத்த ஐந்து தினங்களுக்கு, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், அதிகபட்ச வெப்ப நிலை 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
December 23, 2025, 11:26 pm
எஸ் டி கூரியர் இணை இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சகோதரருமான சிராஜூத்தீன் காலமானர்
December 23, 2025, 12:58 pm
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லை: பயணிகள் கடும் அவதி
December 22, 2025, 2:04 pm
மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்டார்
December 22, 2025, 8:25 am
திருப்பரங்குன்றத்தில் தொழிலாளியைத் தாக்கி பாஜவினர் அராஜகம்
December 21, 2025, 11:23 pm
முதல்வருடன் ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சந்திப்பு
December 21, 2025, 10:46 pm
R.E முஹம்மது காசிமின் பேரர் கல்வித் தந்தை R.E.M.S.அப்துல் மஜீது காலமானார்
December 21, 2025, 7:45 am
“களத்துக்கே வராத விஜய் களத்தைப் பற்றி பேசுவது நகைச்சுவை”: விஜய்யை சீண்டிய சீமான்
December 19, 2025, 5:00 pm
"கிறிஸ்தவ கொள்கைகளுக்கும் திமுக கொள்கைளுக்கும் வேறுபாடு கிடையாது": உதயநிதி ஸ்டாலின்
December 19, 2025, 11:22 am
