செய்திகள் மலேசியா
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்ட சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா
சுங்கை சிப்புட்:
பேரா, சுங்கை சிப்புட் ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழாவும் ஆலய ஸ்தாபிதம் கண்டு 100ஆம் ஆண்டு நிறைவு பெற்ற விழாவும் இன்று சிறப்புடன் நடைபெற்றது.
காலை மணி 9.மணிக்கு நடைபெற்ற இவ் விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிந்தனர்
இது ஆலயத்தின் 5ஆவது கும்பாபிஷேகம் ஆகும். சுமார் 20 லட்சம் வெள்ளி செலவில் இந்த ஆலயம் சீரமைக்கப்பட்டதாக ஆலய திருப்பணி குழுத் தலைவர் சங்கர் கணேஷ் கூறினார்.
கடந்த ஓராண்டு காலமாக திருப்பணி நடைபெற்று இன்று கும்பாபிஷே விழா காண்டதற்கு பொது மக்கள் வழங்கிய பேராதரவே காரணம் என்றார்.
இந்த விழாவிற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சுங்கை சிப்புட் நகர் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்ந தலைமை ஸ்தபதி ஸ்ரீதர், குழுவினர்கள் கோவில் கோபுரங்களைம், சிறப்பங்களை புரணமைத்ததுடன் ஆழகான முறையில் வர்ணங்களை தீட்டப்பட்டு பக்கதர்களை பெரிதும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மிக விஷேஷமான முறையில் மூலவர் வேலாயுத பெருமானுக்கு ஏறக்குறைய ஒரு கிலோ தங்கத்தில் நிரந்தர தங்க அங்கியும் , ஐம்பொன்னால் செய்யப்பட்ட மயில் வாகனத்துடன் கருங்கல் பீடமும் அமைக்கபட்டுள்ளது.
விஷேஷ காலங்களுக்காக புதியதாக மேலும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட உற்சவ மூர்த்தி ஆறுமுக கடவுள் இந்தியாவில் இருந்நு தருவிக்கபட்டுள்ள தகவலை சங்கர் கணேஷ் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 21, 2025, 6:20 pm
சந்தேகத்திற்குரியவர்களின் கைத்தொலைபேசிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஐஜிபி
January 21, 2025, 6:16 pm
பெருநாள் காலத்தில் பி40, எம்40 பிரிவினருக்கு மட்டும் இலவச டோல் கட்டணச் சேவை வழங்கப்படலாம்: ஃபோம்கா
January 21, 2025, 6:01 pm
1 எம்டிபி மலேசியாவிற்கு நன்மை பயக்கும்: நஜிப்
January 21, 2025, 5:43 pm
மொக்ஸானி, மிர்சானின் சொத்து அறிவிப்பில் எம்ஏசிசி திருப்தியடைந்துள்ளது: அஸாம் பாக்கி
January 21, 2025, 5:41 pm
என் வழக்கு மதம் பற்றி அல்ல, உறவு சார்ந்தது என்பதை குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு நன்றி: இந்திரா காந்தி
January 21, 2025, 4:58 pm
தண்ணீர் பயன்பாட்டு வரம்புகள் குறித்த விதிமுறைகளை அரசாங்க நிறுவ வேண்டும்: ஸ்பான்
January 21, 2025, 4:33 pm
கிள்ளானில் நிகழ்ந்த ரசாயன தொழிற்சாலை வெடிப்பு சம்பவத்தில் 32 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
January 21, 2025, 4:10 pm