
செய்திகள் இந்தியா
குஜராத்: முஸ்லிம் பெண்ணுக்கு அரசு வீடு ஒதுக்கப்பட்டதற்கு குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு
புது டெல்லி:
குஜராத்தில் அரசு திட்டத்தின் கீழ் முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கு ஹிந்து குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
குஜராத், வதோதராவில் உள்ள ஹர்னி பகுதியில் முதல்வரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாநகராட்சி குடியிருப்பு கட்டியது.
2018 இல் முஸ்லிம் பெண் ஒருவருக்கு அந்தக் குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. இதற்கு அந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அந்தப் பெண்ணால் இப்போது வரையில் அந்த வீட்டில் குடியேற முடியவில்லை.
அந்தக் குடியிருப்பில் வசிக்கும் ஹிந்துக்கள் கூறுகையில், ஹர்னி பகுதி ஹிந்துக்கள் மட்டுமே வசிக்கும் பகுதி. இந்தப் பகுதியில் முஸ்லிம்களுக்கு வீடு ஒதுக்க முடியாது.
இது கலவரப் பகுதிகள் சட்டத்தின் கீழ் வருவதால் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி இல்லாமல் ஒரு மதத்தைச் சேர்ந்தவர், மற்றொரு மதத்தைச் சேர்ந்தவருக்கு சொத்துகள் விற்பனை செய்ய முடியாது.
முஸ்லிம் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் எங்கள் போராட்டம் தீவிரமடையும் என்றனர்.
இதுகுறித்து முஸ்லிம் பெண் கூறுகையில், குடியிருப்பில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், என்னால் ஹர்னியில் ஒதுக்கப்பட்ட வீட்டில் குடியேற முடியவில்லை. இந்த பிரச்னைக்கு நீண்ட காலமாக எந்தத் தீர்வும் ஏற்படவில்லை. இதனால் நானும் எனது மகனும் வேறு இடத்தில் வசித்து வருகிறோம் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm